மரவண்டின் ரீங்காரம்

December 26, 2005

டூரிங் டாக்கீஸ்

Filed under: Uncategorized — மரவண்டு @ 3:41 pm

என்னோட சொந்த ஊரு சிவகாசி பக்கத்துல இருக்குற விளாம்பட்டின்னு ஒரு கிராமம்.இப்போ எங்க ஊர்ல தியேட்டர் எதுவும் கிடையாது ..ஆனா எங்க ஊருல ஒரு பத்துவருஷத்துக்கு முன்னாடி “ஓம்சண்முகா” ன்னு ஒரு கொட்டாயித் தியேட்டர் இருந்துச்சி …சாயந்தரமாச்சுன்னா சுத்துப்பட்டி மக்களுக்கெல்லாம் இந்த ஓம்சண்முகா தியேட்டருதான் போக்கிடம்…அப்போலாம் சன் டீவி , ஜெயாடீவி , F டீவி (:-) எதுவுமே கிடையாதுல ….எங்க ஊரைச் சுத்தி  , சின்னப் பொட்டல்பட்டி , பெரிய பொட்டல்பட்டி ,அம்மாபட்டி ,சிங்கம்பட்டி ,கிச்சநாயக்கன் பட்டி , சூரநாயக்கன்பட்டி , ஊராம்பட்டி , போடுரெட்டியபட்டி , மாரனேரி , பூலாஊரணி,
காமராஜர் காலனி  இப்படி… ஏகப்பட்ட குட்டி குட்டி ஊரு இருக்குங்க

இந்த தியேட்டர்ல தினமும் ரெண்டு சோ போடுவாய்ங்க .. ஏழு மணிக்கு ஒன்னு , பத்து மணிக்கு ஒன்னு … சாயந்தரம் 6 மணி ஆச்சுன்னா விநாயகனே வினை தீர்ப்பவனேன்னு குழாய் ரேடியோல பாட்டப் போட்ருவாய்ங்க..ஓரளவுக்கு கூட்டம் சேந்திருச்சின்னா கரெக்டா ஏழு மணிக்கு டான்னு படத்தப்  போட்டுருவாய்ங்க . இல்லேன்னா கொஞ்சம் இழுத்தடிப்பாய்ங்க , படம் போடுறதுக்கு அஞ்சு நிமிசத்துக்கு முன்னாடி கடைசி ரெக்கார்டுன்னு ஒன்னு போடுவாய்ங்க ,” டொடன் டொடன் டோய் டோன் டோன்ய்ன்னு … ” பாடும் . அது முடிஞ்சதும் படத்தப் போட்டுருவாய்ங்க ,படம் போட்டாச்சுன்னா , தியேட்டருக்கு மேலே பச்சைக்கலரு நீள் குழல் விளக்கு எரியும். அதப்பாத்துட்டு வெளிய இருக்குற மக்கள் படம் ஆரம்பிச்சிருச்சுன்னு தெரிஞ்சுக்குவாங்க

தியேட்டர்ல மூணு விதமான டிக்கெட்டுகள் , தரை , பெஞ்ச் ,சேர் , நமக்குலாம் எப்பையும் தரைதான் வசதி ஒரு துண்ட விரிச்சிப் படுத்துக்கிட்டே படம் பாப்பேன் , நடுல நடுல இடைவேளைக்கு முறுக்கு வாங்க வச்சிருக்குற கால் ரூவா டவுசர் பாக்கட்ல இருக்கா.. இல்ல உருண்டு கீழே போயிருச்சான்னு  பாத்துக்குவேன்..

0

இந்தத் தியேட்டர்ல படம் கொஞ்சம் சுமாராத் தான் தெரியும் , ஏன்னு கேட்டிங்கன்னா ..கார்பன் குச்சுன்னு ஒன்னு இருக்கு , ஆபரேட்டர் ரூமுல இந்தக் கார்பன் குச்சியை எரிச்சு அதுல வர்ற வெளிச்சத்துல தான் நமக்கு படம் காட்டுவாய்ங்க , நேரம் ஆக ஆக இந்தக் குச்சி தேஞ்சிட்டே போவும்..
பெரிய பெரிய டவுன் தியேட்டர்லலாம் இந்தக் கார்பன் குச்சி சின்னதானதும் அத எல்லாம் பெறக்கி கிராமத்துல இருக்குற சின்னத் தியேட்டருக்கு வித்துப்புடுவாய்ங்க .. பெரும்பாலும்  இந்த மாதிரித் தேஞ்சு போன குச்சிய வச்சிக்கிட்டுதான்  சின்னத் தியேட்டர்களில் படம் காட்டுவாங்க .. இப்படிக்காட்டுனா மங்கலாத்தான தெரியும் ..

நான் அஞ்சு வயசுல இருந்து ஒரு பதினஞ்சு வயசு வரைக்கும் அடிக்கடி இந்த தியேட்டர்ல படம் பாத்திருக்கேன்..நான் பாத்த பெரும்பாலான படங்களில் இந்த மாதிரி காட்சிகள் கண்டிப்பா வரும்

0

படத்துல ரெண்டு ஹீரோன்னு வச்சுக்கங்க , அதுல ஒருத்தன் கோழையாவோ  அல்லது கெட்டவனாவோ இருப்பான் ஆனா கடைசில திருந்திருவான்.
0

ஹீரோ எங்கயாச்சும் போவாரு , அங்கனக்குள்ள ஒருத்தன் கத்தியால குத்துப்பட்டு செத்துக் கிடப்பியான் ,ஹீரோ பாத்துக்கிட்டு  சும்மா இருக்க மாட்டாரு  அந்தக் கத்திய உருவுவாறு , அந்த  நேரம் பாத்து போலீஸ் வந்துரும் ,உடனே ஹீரோ ஸ்தம்பிச்சுப் போயி .. ” இன்ஸ்பெக்டர் என்ன நடந்தெதுன்னா…. ” ன்னு வாயெடுப்பார் ..அதுக்குள்ள இன்ஸ்பெக்டர் , ” நீங்க சொல்லவேண்டியதெல்லாம் கோர்ட்ல வந்து சொல்லுங்க “ங்குற வழக்கமான டையலாக்கச் சொல்லி ஹீரோ வாயை அடைச்சிப்புடுவாரு

0

கொள்ளைக்கூட்டத்த கண்டுபிடிக்கப்போறாங்கன்னா , அப்போ ஒரு கிளப்டான்ஸ் வரும் பின்குரலில் ஜானகி அம்மா இழுத்து இழுத்துப் பாடும் , அனுராதா லொங்கு லொங்குன்னு ஆடும்  , ஹீரோவும் மாறுவேஷத்துல கூடச் சேந்து ஆடுவாரு, நமக்குலாம் அது ஹீரோ தான்னு நல்லா அடையாளம் தெரியும் ஆனா அந்த கொள்ளக் கூட்டத்துக்காரங்க இருக்காய்ங்கள்ள, அவிங்களுக்கு கண்ணளவு தெரியாது..மாறுவேஷத்துல இருக்குறது  ஹீரோதான்னு அவிங்களுக்குத் தெரியாது

0

வில்லனை மொட்டைமாடில வெரட்டுற மாதிரி ஒரு சண்டை வந்திச்சின்னு வச்சிக்கோங்க , கண்டிப்பா ஹீரோ உச்சியில இருந்து தொங்குன மானக்கி ஒரு சீனு வரும் , வில்லான் பூட்ஸ் காலால ஹீரோ கையில நளுக்கு நளுக்குன்னு மிதிப்பார் , ஆனா ஹீரோ  கைய மாத்திப் மாத்திப் போட்டுப் பிடிச்சி எப்பிடினாலும் சமாளிச்சிருவாரு, அப்பிடியே தப்பித் தவறி கீழ விழுந்தாலும் ஒரு வைக்கோப்போர் ஏத்திட்டுப் போற லாரி மேலதான் விழுவாரு..

0

பெரும்பாலும் போலீஸ் ஏட்டா நடிக்குறதுக்குனே மூணு பேரு இருப்பாங்க.. ஒருவிரல் கிருஷ்ணராவ் , தயிர்வடை தேசிகன் மற்றும்  வெள்ளைசுப்பையா

0

வில்லன் ஹீரோவச் சுடுற நேரம் பாத்து , அவன் அம்மாவோ தங்கச்சியோ குறுக்க விழுந்து செத்துப்போவாங்க ..இந்த எதிர்பாராத சம்பவத்துனால வில்லன் நிலைகுழஞ்சி போவாரு , ஹீரோவுக்கு வெளம் பொத்துக்கிட்டு வந்துரும்
உடனே விலலன் துப்பாக்கிய கீழ போட்டுட்டு புறமுதுகிட்டு ஓருவாரு

0

கடைசியா கிளைமாக்ஸ் சண்டைக்கு முன்னாடி ஹீரோவோட அப்பன் ஆத்தாவ வில்லன் கடத்திட்டுப் போயி ஒரு பாழடைஞ்ச பங்களாவுல கட்டிப் போட்டிருப்பான் , தலைக்கு மேல மரம் அறுக்குற ரம்பம் கிர் கிர்ர்னு சத்தம் போட்டுட்டு இருக்கும் , திடீர்னு பாத்தா எங்கிட்டோ இருந்து ஹீரோ
ஒரு புல்லட்ல காலி அட்டைப் பெட்டிகளையெல்லாம்  துளைச்சிட்டு பீறிக் கிளம்பி வந்து அப்பன் ஆத்தாவ காப்பாத்திருவாரு ..அப்புறம் ஒரு பெரிய சண்டை நடக்கும் , சண்டை முடிஞ்சதும் , காமெடியன்  போலீஸக் கூட்டுட்டு வந்துருவாரு

0

இதுல எதாச்சும் விட்டுப் போயிருந்திச்சின்னா , நீங்களும் சொல்லலாம்…

 

8 Comments »

 1. போதும்ய்யா போதும்
  இதுக்கு மேல தாங்காது.:-)
  கடைசியா என்ன சொல்ல வர்றீங்க
  வருஷக் கணக்கா சூப்பரா அரைக்கிற மாவை அரைக்கிறத தானே
  லிஸ்ட் போட ஆரம்பிங்க
  இன்னும் நல்லா சிரிக்கலாம்.

  1
  2
  3
  4
  5

  ஆனா கணேஷ்
  டூரிங் கொட்டாயில ஒரு படம் பாத்த நினைவு மங்கலா இருக்கு

  கலையே என் வாழ்க்கையின் திசை மாற்றினாய்
  நீ இல்லையேல் நானில்லையே-ன்னு கூட

  ஒரு பாட்டு வரும்.

  வெளம்-வீரமா?

  Comment by madhumitha — December 26, 2005 @ 3:59 pm | Reply

 2. அண்ணாச்சி உங்கது தமிழ்மணத்தில வரலையே. ஏன்??? இல்லை வருதா????

  Comment by Mohandoss Ilangovan — December 27, 2005 @ 6:24 am | Reply

 3. அருமையான கட்டுரை. நல்ல நடை கணேஷ். அருமையான டவுன் தியேட்டரில் படம் பார்த்த திருப்தி கிடைத்தது.

  அப்புறம்..
  நாயகியைப் பத்தி நீங்க ஏன் எழுதவே இல்லை?
  நாயகி ஊரில் இருக்கும் (தண்ணீர் இருக்கும்) குளத்தில் குளித்துக் கொண்டிருப்பார். கூட ஒரு
  பாட்டு பாடிக் கொண்டிருப்பார். வில்லன் வந்து வம்பு செய்யப் போக, நாயகன் வந்து காப்பாற்றி அப்புறம் அவர் வம்பு செய்வார்.

  ஆற்றில் குளிக்கிற சீன் இருந்தால் நிச்சயம் தாவணி அல்லது பாவாடை தண்ணீரோடு போகும்.

  வில்லன் கூட போடும் சண்டையில் முதல் அடி நிச்சயம் நாயகனுக்கு தான். நாயகன் தடுமாறி விழுந்து உதட்டோரத்தில் இருக்கும் லிப்ஸ்டிக் தீட்டலைத் துடைத்து விட்டு அதை ஒரு பார்வை பார்ப்பார். அப்புறம் வில்லன் பாடு அம்போ தான்.

  நாயகனுக்கு நிச்சயம் ஒரு நண்பர் இருப்பார். நாயகிக்கு நிச்சயம் ஒரு நண்பி இருப்பார். அந்த நண்பரும் நண்பியும் நிச்சயம் காதலிப்பார்கள்.

  நாயகன் நேர் எதிரில் இருக்கும் நாயகியை நேரடியாக தொடாமல் ஒரு மரத்தை நோக்கி ஓடிப் போய் அதை சுற்றி வந்து அப்புறம் தொடுவார்.

  என்ன இருந்தாலும் மணலில் உட்கார்ந்து படம் பார்க்கிற அந்த சுகம் வராது!

  Comment by சுபமூகா — December 27, 2005 @ 2:50 pm | Reply

 4. நல்லா இருந்திச்சு கணேஷ்

  Comment by சேதுக்கரசி — December 27, 2005 @ 8:33 pm | Reply

 5. புது வீடு நல்லா இருக்குடே! எப்போ கட்டுனிய?. இத்து போன கார்பன் ராடு பத்தி எழுதிட்டிய. அந்த இத்து போன ரீல பத்தி எழுதலயே. டர் டர்-னு சத்தத்தோட எம்ஜியார் படம் எல்லாம் 50 தடவை அத்து அத்து ஓட்டுவாங்களே. அத வுட்டுட்டீங்க.

  Comment by சிவா — January 5, 2006 @ 3:07 am | Reply

 6. மரவண்டு,
  அட.. நீங்க விளாம்பட்டியா ?. அந்த வழியாகத்தான் ஒரு பத்து வருஷத்துக்கு முன்னாடி 94-97 ல் கல்லூரிக்குப் போவேன். ஆக ரொம்பப் பக்கத்துல வந்துட்டிங்க போல.

  Comment by முத்து — January 25, 2006 @ 11:57 pm | Reply

 7. mukkiyamana vishayatha vittu pottigale annachi. Tamiz cinemala rape scene illama endha kaalathula padam vandhuchu?(courtesy Telugu Movies) Mute pannittu partha rape & duet rendume ore madhiri dhan irukkum. Enna ore vidhyasam , duetla heroine dhan herova thorathi thorathi paaduvanga, hero kochittu povar(oodal??).Rape scenela ulta. Thamiz cinema pathi pesanumna thaniya 1000 site podanumappu. Anyway nice article annachi.

  Comment by kuyilu — February 27, 2007 @ 11:04 am | Reply

 8. எப்படி கணேஷு… காலைல எந்திரிச்சதுல இருந்து நைட்டு தூங்கறது வரையும் வெரும் படமா பாப்பீங்களோ… இப்படி பிரிச்சு மேய்ஞ்சுருக்கீங்க… ரொம்ப நல்லா இருக்கு… நான் இப்பதான் ஒரு blog ஆரம்பிச்சிருக்கேன்… உங்கள மாதிரி நண்பர்களோட ஆதரவு தேவை.

  Comment by Rathan — April 1, 2007 @ 11:15 pm | Reply


RSS feed for comments on this post. TrackBack URI

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Blog at WordPress.com.

%d bloggers like this: