மரவண்டின் ரீங்காரம்

May 22, 2006

தாய் மாமன் ஆயிட்டேன்:-)

Filed under: Uncategorized — மரவண்டு @ 3:50 pm

என் தங்கச்சிக்கு பெண் குழந்தை பிறந்திருக்கு, ரெண்டு வாரத்துக்கு முன்னாடி தான் (30 வது நாள்) குழந்தைக்கு பேர் வைச்சோம், அன்னைக்கு தான் இந்த போட்டோ பிடிச்சோம். பாப்பா பேரு அஸ்மிதா.
தாய் மாமன் ஆனதுக்கெல்லாம் ஒரு பதிவான்னு நீங்க கேட்கலாம், ஆனா ஆசிப்பு பெரியப்பா ஆனதுக்கே ஒரு பதிவு போட்டாரு, அதுக்கு போட்டியா தான் இந்தப் பதிவு..

வலைப்பூ பக்கம் முன்னாடி மாதிரி வரமுடிலை, ஆனாலும் வலை மக்கள் கூட்டம் போட்டா தவறாம தலைய காமிச்சிட்டு வந்துடுறேன், கொஞ்ச நாளைக்கு முன்னாடி க்ருபா சங்கர் கல்யாண நிச்சயதார்த்தத்துக்குப் போயிருந்தேன், அங்க நிறைய நண்பர்கள் வந்திருந்தாங்க..

ஐகாரஸ், ரஜினிராம்கி, லலிதாராம், சுரேஸ் கண்ணன், நடராஜன் சீனிவாசன் இன்னும் பலர்

0

பி.கே. சிவகுமார் சென்னைக்கு வந்திருந்தார், உட்லாண்ட்ஸ்ல ஒரு மீட்டிங்க போட்டுட்டு ரஞ்சித் ஓட்டல் மொட்டை மாடில போயும் ஒரு மீ(க)ட்டிங் போட்டோம், நல்லா இருந்திச்சி, மீனு தான் கொஞ்சம் வேகலை.

பாஸ்டன் பாலாஜியை திடீர்னு எதிர்பாராம சந்திக்கும் வாய்ப்பு கிடைச்சது. எக்மோர் அபிராமி ஓட்டலில் நடந்த இலக்கிய சந்திப்பில் சந்தித்தேன், அன்றிரவு நான், சுரேஷ் கண்ணன், பிரசன்னா ரோஸாவசந்த் இவங்க எல்லாம் அடையாருல இருக்குற ஓட்டலில் சந்திச்சோம்..

இப்படித்தான் போய்ட்டிருக்கு வாழ்க்கை.. மத்தபடி விசேசமா ஒன்னும் இல்லை
பேரு மட்டும் பெருசா இலக்கியம்னு வச்சித் தொலைஞ்சிட்டேன் ஒன்னும் எழுத முடிலை [nose smile]
நேரம் கிடைச்சா வறேன்…

என்றும் அன்பகலா
மரவண்டு

6 Comments »

 1. வாழ்த்துக்கள்! குழந்தை அழகா இருக்கா…

  Comment by சேதுக்கரசி — May 22, 2006 @ 4:23 pm | Reply

 2. வாழ்த்துக்கள் ராஜா… குழந்தைக்கும் வாழ்த்துக்கள்..
  என்றென்றும் அன்புடன்,
  சீமாச்சு…

  Comment by சீமாச்சு — May 22, 2006 @ 4:35 pm | Reply

 3. தாய்மாமன் சீர் சொமந்து வாராண்டி
  அவன் தங்ககொலுசு ஒண்ணு தாராண்டி…..

  தாய்மாமன் பதவி, மற்ற எல்லா பதவிகளையும் விட உயர்ந்தது. வாழ்த்துகள் வண்டாரே.

  நம்ம வீட்டிலேயும் என்னை ‘மாமா’ன்னு கூப்பிட இரண்டு புது உறவுகள் ஜனிச்சிருக்காங்க. ஒரு மருமகன், ஒரு மருமகள்.

  Comment by KVR — May 23, 2006 @ 10:34 am | Reply

 4. தங்கச்சிக்கு குழந்தை பிறந்தாச்சு, எனக்கு தான் இன்னும் கல்யாணம் பண்ணற வழியெ காணோம்னு மறைமுகமா சொல்லற மாதிரி இருக்குதெ…..என்ன நான் சொல்றது சரிதானா…..

  Comment by மஞ்சூர் ராசா — May 23, 2006 @ 11:16 am | Reply

 5. கணேஷ் எப்படி இருக்க. என்னோட இமெயில் முகவரி,
  mahendranmahesh@gmail.com
  mahendranmahesh@yahoo.co.in
  உண்னோட போன் நம்பரைக் குடு. நான் போன் பண்றேன்.

  Comment by மகேஸ் — May 29, 2006 @ 6:25 pm | Reply

 6. மாமா ஆயாச்சு.. எப்போ மாப்பிள்ளை? 🙂

  Comment by 'Rajni' Ramki — May 31, 2006 @ 9:12 am | Reply


RSS feed for comments on this post. TrackBack URI

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Create a free website or blog at WordPress.com.

%d bloggers like this: