மரவண்டின் ரீங்காரம்

February 25, 2007

SPB- 150 பாடல்கள்

Filed under: Uncategorized — மரவண்டு @ 10:03 am

70 மற்றும் 80 களில் வந்த திரை இசைப்பாடல்களை மட்டுமே நான் பெரும்பாலும் விரும்பிக்கேட்பேன்.எனது ஜெயச்சந்திரன் பாடல்கள் பதிவின் மூலமாக எனக்கு நிறைய நண்பர்கள் கிடைத்தார்கள்.அவர்களுள்  முக்கியமான 4 பேரை மட்டும் இங்கே குறிப்பிடுகிறேன்.தியாகு (சென்னை), டாக்டர் நாகராஜ் (சென்னை) , ஸ்ரிகாந்த் (சேலம்), நிலா(ஆஸ்திரேலியா).

0

என் நண்பன் ஒருவன் ” கொடியிலே மல்லிகைப்பூ மணக்குதே மானே ” என்ற பாடலை முணுமுணுத்துக் கொண்டிருந்தான். இந்தப் பாடலில் வரும் ஆண்குரல் யாருடையது என்று அவனிடம் கேட்டேன் , அவன் யோசிக்கத் தொடங்கினான் . உடனே ” உனக்கு 4 வாய்ப்புகள் தருகிறேன் , அதற்குள் சரியாகச் சொல்லிவிட்டால் ஆயிரம் ரூபாய் தருகிறேன் ” என்று அவனிடம் சொன்னேன்.அவன் எந்த அளவுக்குப் பாடகர்களைப் பற்றி அறிந்திருப்பான் என்ற விவரம் தெரியாமலே தான் அப்படிச் சொல்லி விட்டேன். அச்சச்சோ சொல்லிக் கில்லித் தொலைச்சிடுவேனோ என்ற
பயம் வேறு தொற்றிக் கொண்டது . ஆனால் அவனோ , இளையராஜா , மலேசியாவாசுதேவன் ,எஸ்.பி.பி என்று அடுக்கிக்கொண்டே சென்று இறுதியாக வேறு ஏதோ பாடகர் பெயரைச் சொல்லிவிட்டு கீழ் உதட்டைப் பிதுக்கினான்.  நான் ஜெயச்சந்திரன் என்று கூறியதும் அவன்,” ஜெயச்சந்திரன் என்று ஒரு பாடகர் இருக்கிறாரா ? “என்று கேட்டது எனக்கு ஆச்சர்யமாகவும் வருத்தமாகவும் இருந்தது.தமிழில் சுமார் 400 பாடல்களைப் பாடியுள்ள பாடகருக்கு இந்த நிலையா ? இதற்கெல்லாம் காரணம் ஊடகங்களின் பொறுப்பின்மைதான் இதே பாடலைத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பினால் இசை : இளையராஜா, படம் : கடலோரக் கவிதைகள் என்ற தகவலை மட்டுமே இடுவார்கள், பாடலாசியர் மற்றும் பாடகர்கள் விபரத்தை அறியத் தரமாட்டார்கள். கொஞ்சம் மெனக்கெட்டால் அது என்ன ராகத்தில் அமைந்த பாடல் என்ற செய்தியைக் கூட சேர்த்துத் தரலாம்.

0

ஒருமுறை சிவகாசியில் உள்ள ஒரு முயூசிக்கல் சென்டருக்குச் சென்றிருந்த பொழுது அங்கே முன்பின் தெரியாத ஒருவர் கேசட் பதிவு செய்வதற்காக வந்தார் , அவர் எழுதியிருந்த முதல் பாடல் , பூமாலையே போய்ச்சேரவா.அதைப் பார்த்ததும் ” பூமாலையே போய்ச்சேரவா இல்லிங்க.. பூமாலையே தோள் சேரவா ” என்று சொன்னேன் , உடனே அவர் ” பாட்டுவரியெல்லாம்  எவன் உன்னிப்பா கேக்குறான் , பிடிச்சிருக்கு கேக்குறோம்”
என்று சொன்னார் . நம்ப மக்கள்ஸ் ஒரு குத்துமதிப்பாத் தான் பாட்டுக் கேப்பாய்ங்க போல ….

0

இந்தப் பதிவில் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் பாடிய பாடல்களில் எனக்கு மிகவும் பிடித்த அரிதான 150 பாடல்களை மட்டும்  கொடுக்கிறேன். சில பாடல்களின் படம் எனக்குத் தெரியாது, தெரிந்தவர்கள் எனக்கு அறியத் தாருங்கள்…

********************************************************************
எஸ்.பி. பாலசுப்ரமணியன்- தனிப் பாடல்கள்
********************************************************************

1) மூங்கிலிலே பாட்டிசைக்கும் காற்றலையைத் தூதுவிட்டேன்
அவள் முகவடிவை அவன் பார்த்தபின்னே
அந்த பெளர்ணமியை இவன் ரசித்ததில்லை – ராகம் தேடும் பல்லவி

2) ஒரு பார்வை பார்க்கும் போது
உயிர் பாடும் நூறு பாட்டு
மறு பார்வை பார்க்கும் போது
மனம் ஓடும் கேள்வி கேட்டு – நங்கூரம்

3) உன்னைப் படைத்ததும் பிரம்மன்
ஒரு கணம் திகைத்து நின்றிருப்பான்
தங்கச்சிலை உந்தன் சிந்தும் அழகினில்
தன்னை மறந்திருப்பான் – ?

4) இந்த வஞ்சி மகள் ஒரு ஊதாப்பூ
இசை வண்டுகள் வந்து ஊதாப்பூ
இந்த கோலமகள் ஒரு கொய்யாப்பூ
தென்றல் கைகளினாலே கொய்யாப்பூ – தாம்பத்யம் ஒரு சங்கீதம்

5) பொன்னோவியம் ஒன்று ரதியின் வடிவிலே
பூமியில் வந்தது எழில் கொண்டு
கண்ணிலாடிடும் காவியப் பாவை நீ
கையில் மயங்கும் மல்லிகைச் செண்டு – குமரிப்பெண்ணின் உள்ளத்திலே

6) ஈரத்தாமரைப் பூவே உன் இதழில் எத்தனை சாரங்கள்
புத்தன் நானே பித்தன் ஆனேன்
உறங்கவில்லை சில வாரங்கள் – பாய்மரக் கப்பல்

7) படைத்தானே பிரம்மதேவன்
பதினாறு வயதுக் கோலம்
இது யார் மீது பழிவாங்கும் சோதனை
உன்னைக் காண்போர்க்கு சுகமான வேதனை – எல்லோரும் நல்லவரே

8. யார் இது தேவதை ,, ஓராயிரம் பூமழை
சுகம்தரும் நிலா .. வரும் திருவிழா
இதோ என் காதல் தேசம் இங்கே – என் பிரியமே

9) பல்லவ நாட்டு ராஜகுமாரிக்கு பருவம் பதினெட்டு
அவள் பழமுதிர்ச்சோலையில் தாமரை போலே
மலர்ந்ததொரு மொட்டு – இவள் ஒரு சீதை

10) மங்கை ஒரு திங்கள்
கலை மலர்ந்த மணி கண்கள்
கங்கை நதி மீன்கள்
அவள் காதல் சொல்லும் கண்கள் – முன் ஒரு காலத்திலே

11) பொன்னை நான் பார்த்ததில்லை
பெண்ணைத் தான் பார்த்ததுண்டு
பூவை நான் பார்த்ததில்லை
பூவையைப் பார்த்ததுண்டு – கண்ணாமூச்சி
 
12) சித்திரைப்பூ சேலை
சிவந்த முகம் சிரிப்பரும்பு
முத்துச்சுடர் மேனி எழில்
மூடி வரும் முழுநிலவோ – புதுச்செருப்பு கடிக்கும்

13) சந்தன மலரின் சுந்தர வடிவில்
உனை நான் காணூகிறேன்
சிந்தையில் ஆயிரம் செந்தமிழ் காவியம்
மலர்வதை உணருகிறேன் – ?

14) கடலோடு நதிக்கென்ன கோபம்
காதல் கவிபாட விழிக்கென்ன நாணம்
இளங்காற்று தீண்டாத சோலை
மண்ணில் எங்கேயும் பார்த்தாயோ என் தோட்ட பூவே – அர்த்தங்கள் ஆயிரம்

15) வாடாத ரோசாப்பூ நான் ஒன்னு பாத்தேன்
பாடாத சோகத்தோட பாட்டுப் பாடக் கேட்டேன் – கிராமத்து அத்தியாயம்

16) பெண்மை கொண்ட மெளனம் பிரிந்தாலும் நெஞ்சில் சலனம்
ஓடி வந்து மாலை போடத் தேடுது மரணம் – காதல் கீதம்

17) வா பொன்மயிலே நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது
என்றும் நீயின்றி நானில்லை நானின்றி நீயில்லை கண்மணி – பூந்தளிர்

18) மங்கியதோர் நிலவினிலே கனவிலிது கண்டேன்
வயது பதினாறிருக்கும் இளவயது மங்கை – முன் ஒரு காலத்திலே

19) நினைவிலே மனைவி என்று அழைக்கிறேன் அவளை இன்று
இரவெல்லாம் நிலவில் நின்று எழுதுவேன் கவிதை ஒன்று – சரிகமப

20) நீலக்குயில்கள் ரெண்டு மாலைபொழுதில் இன்று
கூவித்திரியும் பாடித்திரியும் ஆயிரம் ஆசைகள் கொண்டு – விடுதலை

21) அவளொரு மேனகை என் அபிமானத் தாரகை
கலையெனும் வானிடை மின்னும் தேவதை – நட்சத்திரம்

22) ஓ… அழகு நிலவு சிரித்து மறைந்ததே
ஓ .. மனதில் சிரித்து உறவை மறந்ததே – மை டியர் மார்த்தாண்டன்

23) மேகம் அந்த மேகம் வழி தேடும் ஊமை தானே
மெளனம் உந்தன் மெளனம் தேவன் கோவில் தெய்வீகம் – ?

24) மேகம் ரெண்டு சேரும் போது மின்னல் பூப்பூக்கும்
உன்னை எண்ணி வாசல் வந்தால் ஜன்னல் பூப்பூக்கும் – பொய்முகங்கள்

25) மேகங்களே வாருங்களே வாருங்களே
என் தலைவி இருக்கும் இடம் தேடுங்கள் – மல்லிகை மோகினி

26) ஒரு பாடலை பல ராகத்தில் உனைப் பார்த்துப் பாடினேன்
பல ஜென்மங்கள் உனைத் தேடினேன்
இன்று நேரில் காண்கிறேன் – மல்லிகை மோகினி

27) மலரே என்னென்ன கோலம்
எதனால் என் மீது கோபம் – ஆட்டோ ரோஜா

28) நீ அழைத்தது போல் ஒரு ஞாபகம்
அது ஆசை அலைகளின் ஊர்வலம்
நீ சிரித்தது போல் ஒரு ஞாபகம்
அது  சிந்தையில் நீ செய்த சாகசம் – தூங்காத கண்ணென்று ஒன்று

29) இளஞ்சோலை பூத்ததா என்ன ஜாலம் வண்ணக் கோலம்
ஒரு பூந்தென்றல் தாலாட்ட சில மேகங்கள் நீரூற்ற – உனக்காகவே வாழ்கிறேன்

30) நித்தம் நித்தம் என் கண்ணோடு இன்பக் கனா
நென்ஞ்சம் எங்கும் வெண் பன்னீரைச் சிந்தும் நிலா – கூட்டுப் புழுக்கள்

31) எதிர்பார்த்தேன் இளங்கிளியக் காணலியே
இளங்காற்றே ஏன் வரலை தெரியலையே
வாராளோ என் மாது பூங்காற்றே போ தூது

32) பொன் என்பதோ பூ என்பதோ காதல் கண்ணே
கண்ணான கண் என்பதோ – அன்னப்பறவை

33) ஜோடி நதிகள் பாதை விலகிச் சேர்ந்தன.. கதை பேசின
இரு கரை முழுதும் இனி மலர் வளரும் – அன்பே ஓடி வா

34) வா வா எந்தன் நிலவே வெண்ணிலவே
என் வாழ்வே நீதான் நிலவே வெண்ணிலவே – சேரன் பாண்டியன்

35) பூ மணக்கும் பூங்குழலி பூஜை தேவதையோ
தேன் மணக்கும் மேனியெல்லாம் தேவன் காவியமோ – ?

********************************************************************
எஸ்.பி. பாலசுப்ரமணியன் & ஜானகி
********************************************************************

1) பூமேடையோ பொன்வீணையோ
நீரோடையோ அருவியோ தேன்காற்றோ பூங்குயிலோ நீ பேசுவாய்
நீ பேசினால் அவையாவும் தானே வாய்மூடுமே பதில் பதில் – ஆயிரம் பூக்கள் மலரட்டும்

2) ரோஜா ஒன்று முத்தம் கேட்கும் நேரம்
வானும் மண்ணும் ஒன்றாய் இன்று சேரும்
மயக்கத்தில் தோய்ந்து மடியின் மீது சாய்ந்து – கொம்பேறிமூக்கன்

3) ஒரு நாள் உன்னோடு ஒரு நாள்
உறவினில் ஆட புதுமைகள் காண
காண்போமே எந்நாளும் திருநாள் – உறவாடும் நெஞ்சம்

4) ஊமை நெஞ்சின் ஓசைகள் காதில் கேளாதோ
மனம் தாங்குமோ இமை தூங்குமோ – ஆனந்த கும்மி

5) அதிகாலை நேரமே இனிதான ராகமே
எங்கெங்கிலும் ஆலாபனை – மீண்டும் ஒரு காதல் கதை

6) எங்கே உன்னைக் கண்டால் கூட நெஞ்சில் கொண்டாட்டம்
ஏக்கம் தீர சேர்த்துக் கொள்வேன் பாடும் வண்டாட்டம்
ஆ .. தங்கம் போல அங்கம் அம்மா தாழம் பூவாட்டம்
தாழம்மா நாள் முழுதும் – சித்திரைச் செவ்வானம்

7) சுகமான சிந்தனையில் இதமான உறவோடு
சொர்க்கங்கள் வருகின்றன
மணம்போல மாங்கல்யம்
மாலைகள் மணக்கின்றன .. மணமாலைகள் மணக்கின்றன .. டாக்ஸிடிரைவர்

8. அலைகளில் மிதக்குது நிலவொன்று குளிக்குது கை கொடு
குளிக்கின்ற நிலவுக்கு முதுகினில் அரிக்குது கைதொடு
தேகம் உருகியதே ஆடை உருவியதே – ?

9) வா காத்திருக்க நேரமில்லை ..ஓ.. நீ பூத்திருக்கும் வாசமுல்லை..ஓ
விரகதாபம் விளையும் காலம் .. விலகியிருந்தால் வாடை வாட்டும் வா..
– காத்திருக்க நேரமில்லை

10) முத்துநகையே முழுநிலவே குத்துவிளக்கே கொடிமலரே
கண்ணிரண்டும் மயங்கிட கன்னிமயில் உறங்கிட
நாந்தான் பாட்டெடுப்பேன் ,
உன்னைத் தாய் போல் பாத்திருப்பேன் – சாமுண்டி

11) நீலக்குயிலே உன்னோடு நான் பண்பாடுவேன்
நாதப்புனலில் அன்றாடம் நான் நீராடினேன்
இந்நாளிலே சங்கீதமும் சந்தோஷமும் ஒன்றானதே
உள்ளம் பாமாலை பாடுதே – மகுடி

12) உயிரே உறவே கொஞ்சம் நாள் சொல்லவா
மறைத்தாலும் மறையாதே அன்புக் காதல் வா வா – அன்பின் முகவரி

13) அழகிய செந்நிற வானம் அதிலே உன்முகம் கண்டேன்
புது ரோஜாவில் ஒன்று பெண்ணென்று வந்து கண்ணோடு நின்ற அழகோ
– காஷ்மீர் காதலி

14) சந்தனப் புன்னகை சிந்திய கன்னிகை மந்திர மல்லிகை தானே
தேன்மழை பொழியும் இதழ்களில் வழியும்
விடிந்ததும் காய்ந்து விடும் – ஆட்டோ ராஜா

15) பூந்தளிர் ஆட …பொன்மலர் சூட
சிந்தும் பனிவாடைக் காற்றில்
கொஞ்சும் இரு காதல் நெஞ்சம்
பாடும் புதுராகங்கள் .. இனி நாளும் சுபகாலங்கள் –  ( உமாரமணன் ) பன்னீர் புஷ்பங்கள்

16) நீயா அழைத்தது.. என் நெஞ்சில் மின்னல் அடித்தது
சிலிர்க்கிறேன் …வெண்ணீராற்றில் குளிக்கிறேன்
தவிக்கிறேன் …. என்னை நானே அணைக்கிறேன்
தனிமையில் சிரிக்கிறேன் – அலை ஓசை

17) காதல் ரதியே கங்கை நதியே
கால்தட்டில் காணும் ஜதியே – அந்தரங்கம் ஊமையானது

18) கல்லுக்குள்ளே வந்த ஈரம் என்ன
நெஞ்சுக்குள்ளே வந்த பாரம் என்ன
நீயென்ன மாயம் செய்தாய்
வாழட்டும் கண்ணா என்றென்றும் -?

19) கோடி இன்பம் மேனியெங்கும் பாய்ந்ததம்மா
பிரீத்தி என்று பேரைச்சொன்னாள்
ஊஞ்சலாடும் உள்ளம் உன்னால் – நெஞ்சிலாடும் பூ ஒன்று

20) ஒருகோடி இன்பங்கள் உருவாகும் அங்கங்கள்
அசைந்தாடும் அழகுக் கோலங்கள்

21) தொடவரவோ தொந்தரவோ உனதுளமே சம்மதமோ
ஆஹா அள்ளிடவோ- இருநிலவுகள்

22) புன்னை வனத்துக்குயிலே நீ
என்னை இணைத்து இசை பாடு – முத்துக்காளை

23) எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள்
இங்கே தான் கண்டேன் – பட்டாக்கத்தி பைரவன்

24) அதிகாலை நேரம் கனவில் உன்னைப் பார்த்தேன்
அது கலைந்திடாமல் கையில் என்னைச் சேர்த்தேன் – நான் சொன்னதே சட்டம்

25) காவிரியே கவிக்குயிலே கண்மணியே வா வா
மனம் தாவுதடி தவிக்குதடி தளிர்க்கொடியே வா  – அடுத்தவாரிசு

26) நீ ஒரு கோடி மலர்கூடி உருவானவள் எழில் உருவானவள்
நீ பலர்கூடி புகழ்பாட உருவானவன் என் உயிரானவன் – பாமாருக்மணி

27) எனக்கும் உனக்கும் இனிமேல் என்ன குறை
இருக்கும் வரைக்கும் படிப்போம் அன்புக் கதை – புதிய சங்கமம்

28) எங்கெங்கே நீ தான் அங்கங்கே என்னென்பேன்
அன்பே நான் உன் அன்பே  – அபூர்வ சகோதரிகள்

29) பார்த்த பார்வையில் என் உள்ளமென்ன பள்ளமானது
வார்த்தை சொன்னதில் உன் பள்ளமென்ன பாலமானது – கெளரிமனோகரி

30) கார்மேகம் ஊர்கோலம் போகும்
காதலில் தூதாக உனை வந்து தேடும் – காலமெல்லாம் உன் மடியில்

31) மனசுக்குள்ள நாயனச் சத்தம் நான் கேட்டேன்
கனவுக்குள்ள மாலையக் கட்டி நான் போட்டேன் – மல்லுவேட்டி மைனர்

32) தேன் சிந்துதே வானம் உனை எனைத் தாலாட்டுதே
மேகங்களே தரும் ராகங்களே எந்நாளும் வாழ்க – பொன்னுக்குத் தங்க மனசு

33) விழியிலே மணி விழியில் மெளன மொழி பேசும் அன்னம்
உந்தன் விரல் தொடும் இடங்களில் பூவும் மின்னும் – நூறாவது நாள்

********************************************************************
எஸ்.பி. பாலசுப்ரமணியன் & சுசிலா
********************************************************************

1) நான் கட்டில் மேலே கண்டேன் வெண்ணிலா
எனைக் கட்டிக்கொண்டு பேசும் பெண்ணிலா
விழிகளில் தாபம் படமெடுத்தாடும்
வேளையில் நான் வர சீறுது சிணுங்குது ஏன் – நீயா ?

2) உன்னை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதில்லை
என் இருவிழியோ ஒரு கணமும் இமைப்பதில்லை – நீயா ?

3) கண்ணனை நினைக்காத நாளில்லையே
காதலில் துடிக்காத நாளில்லையே
உண்ணும் போதும் உறங்கும் போதும்
எண்ணம் முழுதும் கண்ணண் தானே
கண்ணா கண்ணா – சீர்வரிசை

4) ஆவாரம் பூவு ஆறேழு நாளா
நீ போகும் பாதையில் காத்திருக்கு
என் நுனி மூக்கு ஏனுங்க வேர்த்திருக்கு – அச்சமில்லை அச்சமில்லை

5) தாலாட்டு பிள்ளையுண்டு தாலாட்டு
மணித்தொட்டிலில் முல்லை மெத்தையிட்டு
சிறு மாங்கனிக் கன்னம் முத்தமிட்டு – அச்சாணி

6) ஆயிரம் நிலவே வா .. ஓராயிரம் நிலவே வா
இதழோரம் சுவை தேட .. புதுப்பாடல் விழிபாட – அடிமைப்பெண்

7) ஒன்றே ஒன்று நீ தரவேணும்
ஒன்றென்ன நூறாய் நான் தருவேனே
இன்றோ நாளை போடட்டும் மாலை
கேட்டதைத் தருவேன் நான் தானே – அம்மன் அருள்

8. சிரித்தாள் அந்த சிரிப்பில் ஒரு மோகம்
அணைத்தாள் அந்த அணைப்பில் ஒரு ராகம்
கேட்டாள் அந்த கேள்வியில் ஒரு நாணம் – ஆனந்த பைரவி

9) பால் நிலவு நேரம் … பார்க்கவில்லை யாரும்
பூவிதழின் ஓரம் தேனெடுக்கலாமா ? … நீ தடுக்கலாமா ? – அன்பு ரோஜா

10) காத்தோடு பூ உரச..  பூவ வண்டுரச
உன்னோடு நான் … என்னோடு நீ
பூவா காத்தா உரச – அன்புக்கு நான் அடிமை

11) இது நான் அறியாத மயக்கம்
முதல் நாள் ஆரம்பப்பழக்கம்
இனிமேல் எனக்கேது உறக்கம் .. எண்ணம் பதினாயிரம் – அன்று சிந்திய ரத்தம்

12) நதியோரம் நாணல் ஒன்று நாணம் கொண்டு
நாட்டியம் ஆடுது மெல்ல
நான் அந்த ஆனந்தம் என்சொல்ல – அன்னை ஓர் ஆலயம்

13) நாலு பக்கம் வேடருண்டு
நடுவினிலே மானிரண்டு
காதல் … இன்பக் காதல்
அம்மம்மா என்னம்மா – அண்ணன் ஒரு கோவில்

14) ஆரம்ப காலத்தில் ஆசை பிறக்கும்
அம்மம்மா அதிலே ஏதோ இருக்கும்
உனக்கும் எனக்கும் ஏக்கம் துவக்கம் – அரங்கேற்றம்

15) மங்கையரில் மகராணி
மாங்கனி போல் பொன்மேனி
எல்லையில்லாக் கலைவாணி
என்னுயிரே யுவராணி – அவளுக்கென்று ஒரு மனம்

16) ரம்பா ஊர்வசி மேனகா
ரசமான சிருங்காரம் உண்டாக்கும் தேவிகள் – வேடனைத் தேடிய மான்

17) ரேகா ரேகா காதல் எனும் வானவில்லைக் கண்டேன்
நீ பார்த்த பார்வையில் – காற்றுக்கென்ன வேலி

18) அங்கம் புதுவிதம் அழகினில் ஒரு விதம்
நங்கை முகம் நவரச நிலவு – வீட்டுக்கு வீடு வாசப்படி

19) பனிமலை மேகங்கள் பொழிகின்ற குளிரினில்
திருக்குறள் படிக்கடுமா ?  – தொட்டதெல்லாம் பொன்னாகும்

20) எனக்குப் பிடித்த ரோஜா பூவே எடுத்துச் செல்லலாமா
எதற்கு உனக்கு ஏக்கம் கண்ணா  என்னைக் கேட்கலாமா –
பணம் பகை பாசம்

21) அன்பு மேகமே இங்கு ஓடிவா
எந்தன் துணையை அழைத்து வா
அர்த்த ராத்திரி சொன்ன சேதியை
உந்தன் நினைவில் நிறுத்தி வா – எங்கம்மா சபதம்

22) ஏதோ ஒரு நதியில் நான் இறங்குவதைப் போலே
ஏதோ ஒரு இன்பம் நீ அருகில் இருந்தாலே – என்ன தவம் செய்தேன்

23) எந்தன் தேவனின் பாடலென்ன அதில் ஏங்கும் ஏக்கமென்ன
நெஞ்சம் பூப்பந்தாய் துள்ளாதோ மஞ்சம் வாவென்று துள்ளாதோ
அள்ளவோ உண்ணவோ  –

24) யாருமில்லை இங்கே .. இடம் இடம் இது சுகம் சுகம் தினம் தரும் தரும்
ஆசை நெஞ்சம் எங்கே வரும் வரும் வருவரை கொஞ்சம் பொறும்

25) ஆவணி மலரே ஐப்பசி மழையே
கார்த்திகை விளக்கின் தனிஒளியே – தொட்டதெல்லாம் பொன்னாகும்

26) காதல் காதல் என்று பேச கண்ணன் வந்தானோ
காலம் பார்த்து ஜாலம் செய்ய மன்னன் வந்தானோ – உத்தரவின்றி உள்ளேவா

27) மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
நாளிலே நல்ல நாள் நாயகன் சென்ற நாள்
– உத்தரவின்றி உள்ளேவா

28) மேடையில் ஆடிடும் மெல்லிய பூங்காற்றே
நீ ஆடையில் ஆடினால் மன்மதன் விளையாட்டே
உன் மேனியின் சாயலே ஆனந்த நீரூற்றே
– வண்டிக்காரன் மகள்

29) முல்லைப்பூ பல்லக்கு போவதெங்கே கனி மூன்றும் போகும் பாதையெங்கே
இது காவலை மீறிய காற்று உன் காதலை வேறெங்கும் காட்டு – வாணி ராணி

30) பொன்னான மனம் எங்கு போகின்றது சொல்லுங்கள் மேகங்களே
என் ஆசைக்கண்ணன் நாள் பார்த்து வந்தான் இங்கே வா தென்றலே
 – திருமாங்கல்யம்

31) முதல் முதல் வரும் சுகம் எதுவென இளமை கேட்கிறது
முதல் இரவினில் வரும் சுகமென இதழ்கள் சொல்கிறது
– காலங்களில் அவள் வசந்தம்

32) ஓடம் கடலோடும் ..அது சொல்லும் பொருளென்ன
அலைகள் கரையேறும் … அது தேடும் துணையென்ன
ஏதோ அது ஏதோ அதை நானும் நினைக்கின்றேன்
ஏனோ அது ஏனோ அதை நானும் ரசிக்கின்றேன் – கண்மணி ராஜா

33) காதல் விளையாட கட்டிலிடு கண்ணே
தூயமகனாட தொட்டிலிடு கண்ணே
எண்ணங்களின் இன்ப நடனம்
கன்னங்கள் மீது அன்பு நிலை எழுதும் – கண்மணி ராஜா

34) மேகமே தூதாகவா அழகின் ஆராதனை
தென்றலே தாலாட்டவா இளமை முந்தனை – கண்ணன் ஒரு கைக்குழந்தை

35) கண்ணெல்லாம் உன் வண்ணம்
நெஞ்செல்லாம் உன் எண்ணம்
கண்ணே செம்பொன்னே நீ வா வா – ?

36) நான் ஒரு பொன்னோவியம் கண்டேன் இதிலே
இளமை இனிமை இது புதுமை
போதை தரும் நாதசுகம் பாடிடும் செந்தேன் மழை உந்தன் மொழியோ
பார்வையில் ஆயிரம்  கவிதைகள் எழுதிடும் அபிநயம்- கண்ணில் தெரியும் கதைகள்

37) நான் உன்னை நினைச்சேன் நீ என்னை நினைச்ச
தன்னாலே ரெண்டும் ஒன்னாச்சு
நம்ம யாரு பிரிச்சா ஒரு கோடு கிழிச்சா
ஒன்னான சொந்தம் ரெண்டாச்சு
உன்னாலத் தானே பலவண்ணம் உண்டாச்சு
நீ இல்லாமத்தானே அது மாயம் என்றாச்சு – கண்ணில் தெரியும் கதைகள்

38) சொந்தம் இனி உன்மடியில் சொர்க்கம் இனி உன் அழகில்
நீயின்றி தூங்காது நெஞ்சம் ..
நான் தருவேன் … கொஞ்சம் நீ தருவாய்
இங்கு தாங்காது பூப்போட்ட மஞ்சம் -?

39) இது ராஜகோபுர தீபம் அகல் விளக்கல்ல
மலை மூடும் ஐப்பசி மேகம் பனிக் குளிரல்ல
பொங்கும் நிலவோ பொதிகைத் தென்றல்
மங்கை பல்லாண்டு வாழ்க வாழ்க – டாக்ஸி டிரைவர்

40) கேட்டதெல்லாம் நான் தருவேன் எனை நீ மறக்காதே
காலமெல்லாம் நான் வருவேன் எனை நீ தடுக்காதே –
திக்குத் தெரியாத காட்டில்

41) நிலவு வந்து வானத்தையே திருடிக் கொண்டது
நீண்ட கண்ணும் உன் அழகை திருடிக் கொண்டது – திருடி

42) மரகதமேகம் சிந்தும் மழைவரும் நேரமிதே
திருமகள் தேகம் இங்கே திருமால் தவித்தானே
ஆசை நெஞ்சம் கூடும் போது காலம் இல்லாதது …. ஆ … காதல் பொல்லாதது
– மேகத்துக்கும் தாகமுண்டு

43) கண்டேன் கல்யாணப்பெண் போன்ற மேகம்
அங்கே உல்லாச ஊர்வல ஓடம்
மணமகன் மணமகள் மணவறைக்கோலமே – மேயர் மீனாக்ஷ¢

44) முள்ளில்லா ரோஜா முத்தாரப் பொன்னூஞ்சல் கண்டேன்
பொன்னைப் போல் நின்றேன் – மூன்று தெய்வங்கள்

45) ஆரம்பம் யாரிடம் உன்னிடமா
ஆசைபொங்கும் சொல்லச் சொல்ல  – மிஸ்டர் சம்பத்

46) தொடங்கும் தொடரும் புது உறவு
மயங்கும் மலரும் பல இரவு
மடிமீது நீ வரும் போது
சொல்லும் மோகன ராகங்கள் நூறு – முடிசூடா மன்னன்

47) என் இதயராணி தேகம்
ஓர் இனிமையான ராகம்
அந்தி பொழுது சாயும் நேரம்
அதைப்பாடிப்பார்க்க வேண்டும் – நாலு பேருக்கு நன்றி

48) சபதஸ்வரம் புன்னகையில் கண்டேன்
சங்கீதத்தின் தாலாட்டைக் கேட்டேன்
நடமாடும் கலைக்கூடம் விழிஜாலத்தில் உருவானதோ –
நாடகமே உலகம்

49) பொன்னாங்கன்னி பூத்து வந்ததோ
புன்னகையில் தெரியுது அம்மா
பல்லாங்குழி சோழிகள் எல்லாம் உன் வடிவில் வந்ததம்மா
ஆத்தா உன்ன நானே பாத்தா புள்ளிமானே – நட்சத்திரம்

50) எங்கேயோ ஏதோ பாட்டொன்று கேட்டேன்
அங்கே வா நீயும் ஆனந்தம் காண்போம்
குளிர்மேகங்கள் பனிக்காலங்கள் பெறவேண்டும் சுகங்களே –
நதியைத் தேடி வந்த கடல்

51) அவள் ஒரு பச்சைக் குழந்தை பாடும் பறவை பருவம் பதினாறு
அவன் ஒரு ராஜகுமாரன் அழகிய மாறன் வாழிய பல்லாண்டு
காதல் தெய்வங்கள் கோயில் தீபங்கள் மேளதாளங்கள் வாழ்த்துதே – நீ ஒரு மகாராணி

52) புல்லாங்குழல் மொழி தமிழ் தமிழ் தமிழ் என
பூவை இதழ் முத்துச் சிமிழ் சிமிழ் சிமிழ் என
வந்தாள் காவடிச் சிந்தாள் – ஊரும் உறவும்

53) வானத்தைப் பார்த்திருந்தேன் .. உந்தன் வண்ணம் தெரிந்தடி
வட்ட நிலவினிலே உந்தன் வாலிபம் வந்ததடி – பட்டம் பதவி

54) பசி எடுக்குற நேரம் வந்தா உன்னைப் பாக்கணும்
பருவத்தின் தேவை எல்லாம் என்னைக் கேட்கணும் –
அடி ராஜாத்தி புது ரோஜாப்பூ அதைக் கிள்ளக்கூடாதோ
ராகத்தில் புதுராகத்தில் கதை சொல்லக்கூடாதோ – பட்டாம்பூச்சி

55) அவளே என் காதலி
கொடி நீருக்குள்ளே மலர்மேலே பெண் குளிப்பது தாமரை போலே
நான் நீராய்ப் பிறந்திருந்தாலும் இந்நேரம் என்னென்னவோ – பேரும் புகழும்

56) விடிய விடிய சொல்லித் தருவேன்
பொன்மாலை நிலாவினில் மேகங்கள்
என் மார்பினில் உலாவரும் தாகங்கள்
இன்னும் என்னென்னவோ என் எண்ணங்கள்- போக்கிரி ராஜா

57) பொன்வானிலே எழில் வெண்மேகமே
பன்னீரில் நீராடும் பெண் அன்னமே
என் ஆனந்தம் ஆரம்பமே .. என் தேவி – அன்பின் முகவரி

58)  தங்கத் தேரோடும் அழகினிலே இந்த ராஜாத்தி கொழுவிருந்தாள்
அந்த ராஜாத்தி பார்வையிலே இந்த ராஜாவும் தவமிருந்தான் – ரகுபதி ராகவ ராஜாராம்

59) கல்யாண மாலை … கொண்டாடும் வேளை
வரவேண்டும் தரவேண்டும் உன்னோடு நாளை – ராமன் பரசுராமன்

60) விழியில் என் விழியில் ஒரு பூ பூத்தது
பூ இன்று பெண்ணானது பூ இன்று உன்னானது
இதழோடு இதழ் சேர .. அம்மம்மா அப்பப்பா என்ன ஆனந்தம் .. தம் தம். .
– ராம் லஷ்மண்

61) தொடுவதென்ன தென்றலோ மலர்களோ
பனியில் வந்த துளிகளோ கண்களோ
உடலெங்கும் குளிராவதென்ன என் மனமெங்கும் நெருப்பாவதென்ன  – சபதம்

62) ஒரு காதல் தேவதை இரு கண்கள் பூமழை
இவள் ராஜவம்சமோ ரதிதேவி அம்சமோ – சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு

63) வந்தாளே ஒரு மகாராசி அன்பே தான் என்றும் இவள் ராசி
அதிகாரம் இவள் கைராசி அதை வெல்லும் எந்தன் முகராசி – சங்கர் சலீம் சைமன்

64) இயற்கை என்னும் இளைய கன்னி
ஏங்குகிறாள் துணையை எண்ணி – சாந்தி நிலையம்

65) கல்யாணக் கோவிலின் தெய்வீகக் கலசம்
கண்கள் தெரியுது தெளிவாக
வானப் பட்டு மேகம் காதல் தட்டில் ஏறி
ஆடட்டும் ஓடட்டும் ஆனந்தம் பாடட்டும் கண்ணே – சத்யம்

66) சிப்பியின் உள்ளே முத்தாடும் சேதி
சொல்லாமல் என்னிடமே மறைத்தாளே தேவி
மடியல்லவோ பொன்னூஞ்சல் .. உன் மகனாய் நான் வரவோ – யாருக்கு யார் காவல்

********************************************************************
   எஸ்.பி. பாலசுப்ரமணியன் & வாணிஜெயராம்
********************************************************************

1) வேண்டும் வேண்டும் உந்தன் உறவு
வெண்பனித் தென்றல் உள்ளவரையில் – வசந்தத்தில் ஒரு வானவில்

2) சப்தஸ்வரம் புன்னகையில் கண்டேன்
சங்கீதத்தின் தாலாட்டைக் கேட்டேன்
நடமாடும் கலைக்கூடம்
விழி ஜாலத்தில் உருவானதோ – நாடகமே உலகம்

3) எனைத் தேடும் மேகம் சபை வந்து சேரும்
செவியில் விழுமோ ஊமையின் ராகம்
எதிர்வந்த போதும் திரை வந்து சேரும் – கண்ணோடு கண்

4) ஒரு தேவதை வந்தாள் மனக்கோவிலில் நின்றாள்
அவள் பார்வை பாமாலை
பூங்காற்று வீசும் ஆனந்தபொன்மாலை நேரம் – நீதிபதி

5) ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணா
ஒரே பூவில் ஒன்றே தென்றல் வாராய் கண்ணா

6) குறிஞ்சிமலரில் வழிந்த ரசத்தை உறிஞ்சத் துடிக்க
ஒடியதென்ன என் மனம் வாடியதென்ன – அழகே உன்னை ஆராதிக்கிறேன்

7) இரவும் பகலும் எனக்கு உன் மேல் கண்ணோட்டம்
என் இதயத் துடிப்பில் புதிய வேகம் கொண்டாட்டம் – பில்லா

8. நான் உன்னை நினைச்சேன் நீ என்னை நினைச்ச
தன்னாலே ரெண்டு ஒன்னாச்சு
நம்ம யாரு பிரிச்சா ஒரு கோடு கிழிச்சா
உன்னாலத் தானே பலவண்ணம் உண்டாச்சு
நீ இல்லாமத் தானே அது மாயம் என்றாச்சு – கண்ணில் தெரியும் கதைகள்

9) மதனோச்சவம் ரதியோடு தான்
ரதி தேவியோ பதியோடுதான் – சதுரங்கம்

10) வா வா என் வீணையே விரலோடு கோபமா
மீட்டாமல் காதல் ராகம் யாவும் விளைந்திடுமா
கிள்ளாத முல்லையே காற்றோடு கோபமா
இளந்தென்றல் தேடும் போது ஊடல் ஆகுமா – சட்டம்

11) ஒரே நாள் உனை நான் நிலாவில் பார்த்தது உலாவும்
என் இளமைதான் ஊஞ்சலாடுது –  இளமை ஊஞ்சலாடுகிறது

12) மாலை மலர் பந்தலிட்ட மேகம்
மங்கையிடம் சங்கொலிக்கும் ராகம்
கோடி நதி பின்னலிட்ட தேகம்
கோபுரத்தில் ஏற்றி வைத்த தேகம் – அக்கா

********************************************************************
   எஸ்.பி. பாலசுப்ரமணியன் & எஸ்.பி. ஷைலஜா
********************************************************************

1) மலர்களே இதோ இதோ வருகிறாள் தலைவி
பூவோ பொன்னோ முத்தோ மணியோ
பொங்கும் காதல் கங்கை நதியோ – தீராத விளையாட்டுப் பிள்ளை

2) மாலை வேளை ரதி மாறன் பூஜை
அடி மானே இதோ இதோ தேவை நானா நானா – ?

3) மனதில் என்ன நினைவுகளோ இளமை கனவோ
அதுவோ இதுவோ இனிய ரகசியமோ – பூந்தளிர்

4) கொலுசே கொலுசே இசை பாடு கொலுசே
நீ பாடாதிருந்தால் நான் பாதை மறப்பேன் – பெண் புத்தி பின் புத்தி
********************************************************************

பி.கு

வேலை மாற்றம் காரணமாக சில மாதங்களாக வலைப்பதிய வாய்க்கவில்லை.
 

10 Comments »

 1. எங்கிருந்துதான் இந்த அரிய பாடல்களை பிடித்தீர்களோ. எஸ்.பி.பி.கே மறந்து போயிருக்கும். சில படத்தின் பெயர்களும் கேட்டிராத பெயர்களே!

  //இதே பாடலைத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பினால் இசை : இளையராஜா, படம் : கடலோரக் கவிதைகள் என்ற தகவலை மட்டுமே இடுவார்கள்// தொலைக்காட்சியில் அதையாவது போடுறாங்க. வானொலியில் அந்த தகவல் கூட சில சமயமில்லை. இந்த பாடல் எந்த படம் என்று மண்டையை பிச்சிக்கொண்டிருக்கிறேன் பல சமயங்களில்.

  Comment by Jazeela — February 25, 2007 @ 12:37 pm | Reply

 2. Nice work..even myself, i am collecting many of the songs of 70’s.
  From your list:

  SPB-Song 31. Etir paarthen– Movie: Andha Raathirikku Saatchi Illai.
  Song-35. Poo Mankkum–Movie: Raththa Paasam

  SPB-SJ-Song 20. Oru Kodi Inbangal–Movie: Neeya?

  SPB-PS-Song 23. Enthan Devanin–Movie: Iraivan Irukkindran
  song 24. Yaarumillai Inge–Movie: Panatthukkaaga

  SPB-VJ-Song 5. Ore Jeevan–Movie: Neeya?

  Could you pls guide me where i find mp3 format all your listed SPB/K.J.Yesudas/Jayachandran songs for download?

  Thanks,
  Jack

  Comment by Jacky — July 7, 2007 @ 4:35 am | Reply

 3. சார். எங்கே இருந்து இந்தப் பாடல்களைப் பிடித்தீர்கள்? அரிய பாடல்களை அறிய வாய்ப்பு தந்தமைக்கு மிக்க நன்றி..

  Comment by Mani — August 14, 2007 @ 6:36 am | Reply

 4. AnbarE,
  Arumayaana SPB collection.
  Oru chiriya correction;
  SPB_Susila No;18 Angam pudhuvidham – inthapaadal VEETTUKKU VEEDU padathil allavaa varugirathu?
  KeezhE kurithulla paadal kalai kEttu irukkireerkalaa?
  1.Kadavul meethu Aanai unnai kaivida maattEn – RADHA
  2.PoongodiyE poongodiyE poovirunthaal tharuvaayaa – SCHOOL MAASTER
  3.uLLATHIL 100 NINAITHeN UNNIDAM SOLLA THUDITHAEN – maappillai Azhaippu
  4. Ilamai enum Pongaatru – Pagalil oru iravu
  5.Panjaangam paarthu cholavo – SEERVARISAI
  6.Vaazhvil sowbaakkiam vanthathu – thoondil Meen
  7.Oru malligai mottu mazhaithulipattu – RANGARAATTINAM
  uNGALUKKU THERINTHIRUKKUM aanalum sollivaithin
  anbudan
  sivaramakrishnanG

  Comment by sivaramakrishnanG — October 5, 2007 @ 2:18 pm | Reply

 5. அருமையான பாடல் தலைப்புகள். நன்றி.

  Comment by கோவைரவீ — November 1, 2007 @ 8:12 am | Reply

 6. A few more movie names for you ..

  SPB Solo
  3. Unnai Padaithathum – Nee Sirithaal Naan Sirippen
  23. Megam Andha Megam – Aayiram Pookal Malarattum

  SPB-SJ
  18.Kallukullae Vandha- Manidhanin Marupakkam

  SPB-PS
  23.Endhan Devanin- Iraivan Irukkindraan
  24.Yaarumillai Inge- Panathukkaaga
  35.Kannellam Un Vannam-Onne Onnu Kanne Kannu
  38.Sondham Ini Un Madiyil- Marupiravi

  Thanks for compiling such a fabulous work of art that is SPB!
  Arvind

  Comment by Arvind Palanisamy — November 24, 2007 @ 1:31 am | Reply

 7. Arumayana SPB paadalkalin vivrangalai thoguthu thanthamaikku mikka nandri sir… U done great work…

  Comment by Mohan Kumar — July 20, 2009 @ 6:40 am | Reply

 8. Aiya, Thalavaree…….periya vallal aiya neengal …….you just gave me an opportunity to reminiscence my teen years ……..thanks

  Comment by krishanthan — November 27, 2009 @ 2:38 am | Reply

 9. நீங்களே தப்பு பண்ணலாமா மரவண்டு ?
  நாலுபக்கம் வேடருண்டு நடுவினிலே மானிரண்டு – எஸ்பிபி யுடன் பாடியது வாணி ஜெயராம்.
  அதை எஸ்பிபி சுசீலா வில் போட்டிருக்கிறீர்கள்.

  Comment by ராஷித் — January 25, 2010 @ 9:08 am | Reply

 10. நீங்களே தப்பு பண்ணலாமா மரவண்டு ?
  நாலுபக்கம் வேடருண்டு நடுவினிலே மானிரண்டு – எஸ்பிபி யுடன் பாடியது வாணி ஜெயராம்.
  அவளே என் காதலி கொடிநீருக்குள்ளே மலர் மேலே – எஸ்பிபி யுடன் பாடியது வாணி ஜெயராம்.

  அதை எஸ்பிபி சுசீலா பாடிய பாடல்கள் பகுதியில் போட்டிருக்கிறீர்கள்.

  Comment by ராஷித் — January 25, 2010 @ 9:11 am | Reply


RSS feed for comments on this post. TrackBack URI

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Blog at WordPress.com.

%d bloggers like this: