மரவண்டின் ரீங்காரம்

April 29, 2007

யுனிகோடில் தட்டச்சுவது எப்படி ?

Filed under: Uncategorized — மரவண்டு @ 3:52 pm

முதலில் தமிழ் தட்டச்சுவான் இ-கலப்பையை நிறுவ வேண்டும்

1) இ-கலப்பையை இங்கே இருந்து இறக்குங்கள்

2) இறக்கிய இ-கலப்பையை உங்கள் கண்ணியில் நிறுவுங்கள் (Install)
3) உங்கள் இணைய உலாவி இண்டெர்நெட் எக்ஸ்ப்ளோரரைத் திறந்து
View – Encoding – Unicode (UTF-8) என்ற மாற்றத்தைச் செய்யுங்கள்.
இப்பொழுது உங்களால் யுனிகோட் வலைத் தளங்களைப் படிக்க முடியும்.

இனி எப்படி தமிழில் தட்டச்சுவது என்று பார்ப்போம்.

1) Notepad ஐ திறந்து வைத்துக் கொள்ளுங்கள்

2) உங்கள் விண்டோசின் செயலிப் பட்டையில்(task bar) வலப்புறம் கீழே ‘K’ என்று உள்ள ஐகானைச் சொடுக்கி unicodetamil என்று மாற்றுங்கள்.
அது இப்போது ‘அ’ என்று சிவப்பு எழுத்தில் காட்டும்.

3) தட்டச்ச ஆரம்பியுங்கள் , என்ன தமிழ் தெரிகிறதா ?

ஆரம்ப நிலையில் ஒரு சில எழுத்துக்களைத் தட்டச்ச நீங்கள் சிரமப்படுவீர்கள்.
கீழே சில குறிப்புகளைக் கொடுத்துள்ளேன்

உயிர் எழுத்துக்கள்

a = அ
aa, A = ஆ
i = இ
ee, I = ஈ
u = உ
oo, U = ஊ
e = எ
ae, E = ஏ
ai = ஐ
o = ஒ
O = ஓ
au = ஔ
q = ஃ

மெய்யெழுத்துக்கள்

g or k = க்
c or s = ச்
d, t = ட்
nj = ஞ்
ng = ங்
b = ப்
w = ந்
n = ன்
N = ண்
m = ம்
y = ய்
r = ர்
R = ற்
l = ல்
L = ள்
z = ழ்
dh or th = த்

உயிர் மெய்யெழுத்துக்கள்

ka = க
kaa or kA = கா
ki = கி
kI or kee = கீ
ku = கு
kuu or kU = கூ
ke = கெ
kE = கே
kai = கை
ko = கொ
koo or kO = கோ
kau – கௌ

இதே போன்று மற்ற எழுத்துக்களுக்கும் பயன்படுத்திக்கொள்ளுங்கள்

வடமொழி எழுத்துக்கள்

S = ஸ்
Sa = ஸ
Se = ஸெ
ch or sh = ஷ்
j = ஜ்
h – ஹ்
sr – ஸ்ரீ

ஹூகுள் மெயில் யுனிகோடில் அனுப்பலாம் கூகுள் சாட் கூட நீங்கள் யுனிகோடில் செய்யலாம்.
யாருடன் பேச வேண்டுமோ அந்த நபரைத் தெரிவு செய்து கொள்ளுங்கள்.
உங்கள் விண்டோசின் வலப்புறம் கீழே ‘K’ என்று உள்ள ஐகானைச் சொடுக்கி
unicodetamil என்று மாற்றுங்கள். தட்டுங்கள்

April 27, 2007

இசைப் பிரியர்களுக்கு

Filed under: Uncategorized — மரவண்டு @ 2:09 pm

கடந்த 6 மாதங்களாக எனது ஓய்வு நேரத்தினை திரை இசைப் பாடல்கள் மூலமே க(ளி)ழித்து வருகிறேன்.இலக்கியத்தை விட இசையில் தான் எனக்கு நாட்டம் அதிகம்.

0

தூள் வலைப்பதிவின் மூலமாக சில நல்ல பாடல்களை அறியப் பெற்றேன்.
சர்வேசன் பதிவின் மூலமாக கானாபிரபாவின் ரேடியோஸ்பதி வலைப் பதிவை அறிந்து கொண்டேன்.மிகவும் சிறப்பான முறையில் கானா பிரபா அவர்கள் பாடல்களைத் தொகுத்து வழங்குகிறார்.அவர் பதிவில் இடம் பெற்றுள்ள அமுத மழை பொழியும் முழு இரவிலே .. ஒரு அழகுச்சிலை உடல் முழுதும் நனைந்ததே என்ற பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்.ஒரு காலத்தில் இந்தப்பாடலுக்காக ஊர் ஊராக அலைந்ததிருக்கிறேன்.கடந்த வருடம் இந்த பாடல் எனக்கு கிடைத்தது.இந்தப் பாடலை எழுதியவர் தமிழ்மணி.

0

சுந்தரின் பாடும் நிலா பாலு என்ற வலைப்பதிவை எல்லோரும் அறிந்திருப்பீர்கள் . இதைப் போல் மேலும் பலர் பாடல்களுக்கென்றே பாடல்களுக்கென்றே தனிப் பதிவு வைத்திருக்கிறார்கள்.

0

நண்பர் சையத் குசைன்  http://www.musicplug.in/ என்ற வலைத் தளத்தை இயக்கி வருகிறார் . இந்தத் தளத்தில் பல பாடல்கள் வலையேற்றம் செய்யப்பட்டுள்ளன , இசை ஆர்வம் மிக்கவர்கள் இந்த வலைத் தளத்தைப் பயன்படுத்திக்கொள்ளலாம் . உங்கள் பதிவுகளில் பாடல்களை இணைக்க உதவி தேவைப் பட்டால் சையத் குசைனை(admin@musicplug.in)   நாடலாம். மேலும் இந்த வலைத் தளத்திலேயே வலைப் பதியவும் செய்யலாம் . மிகச் சிறந்த பதிவுகளுக்கு புள்ளிகள் வழங்கப் பட்டு இசைக் குறுந்தகடுகள் பரிசாக அளிக்கப் படும்.

Blog at WordPress.com.