சுமார் ஒரு மாதத்திற்கு முன் மும்பையிலிருந்து ஒரு நண்பர் எனக்கு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். ஹைக்கூ குறித்தான எனது கட்டுரைகள் சிலவற்றை மரத்தடியில்
படித்ததாகவும் ஹைக்கூவைப் பற்றி அறிந்து கொள்ள ஆவலாக இருப்பதாகவும் அதில் எழுதியிருந்தார். கல்யாண வேலையில் மும்முரமாக இருந்ததால் அவருடைய
மடலுக்கு பதிலளிக்காமல் விட்டுவிட்டேன் . மீண்டும் அவரிடமிருந்து ஒரு மடல், அதில் அவர் பெங்களூரில் நடக்க இருக்கும் ஹைக்கூ ஆய்வரங்கில் தான் பங்கேற்க
இருப்பதால் ஹைக்கூவைப் பற்றிய முழுவிபரம் தேவை என்று குறிப்பிட்டிருந்தார்.அவருக்காக இணையத்தில் நான் எழுதிய சில கட்டுரைகளைத் தேடிய பொழுது எனது தமிழ்-ஹைக்கூ குழுமத்திலுள்ள சில கவிதைகளும் கிடைத்தன.
0
தமிழ்-ஹைக்கூ என்றொரு முன்குழுமத்தை(e-group) சுமார் 4 ஆண்டுகளுக்கு முன்பு சோகம் சஃபீக் என்ற நண்பருடன் இணைந்து நடத்தி வந்தேன்.நான் கவிதைகளைத் தெரிவு செய்து சஃபீக்கிற்கு அனுப்பிவைப்பேன்.அவர் அதை அழகான வண்ணப்படங்களுடன் வடிவமைத்து எனக்கு அனுப்பி வைப்பார்.சில கவிதைகள் உங்களுக்காக……