மரவண்டின் ரீங்காரம்

October 19, 2011

சென்ரியூ (நகைப்பா)

Filed under: Uncategorized — மரவண்டு @ 8:16 pm
Tags:

நான் ரசித்த சில சென்ரியூ கவிதைகள் இதோ உங்களுக்காக…

0

குளிர் சாதனப் பெட்டிக்குள்
வேர்த்து விறுவிறுத்து
பீர் பாட்டில் !

0

சிலிர்க்கவில்லை
எத்தனை பேர் தொட்டும்
கோயில் நந்தி !

0

அம்மா சூடு போட்டதில்
பெயர் தான் அழிந்துபோனது
தழும்பில் அவள் ஞாபகம் !

0

அரசியல் வாதி பேசியதும்
ஆவேசமாய் பொங்கியது
சோடா !

0

குஸ்தி வீரன்
நண்பனுக்கு எழுதினான்
நான் பலம் நீ பலமா ?

0

இழவு வீட்டில்
இன்ப அதிர்ச்சி
உயில் வாசிக்கும் வக்கீல் !

0

வாடிக்கையாளருக்கு காதல் தோல்வி
வருத்தப் பட்டான்
சலூன் காரன் !

0

ஜோடி சேர்ந்தும்
துயரந்தான்
வண்டி மாடுகள் !

0

தனது ஜோடியைக்
காணாமல் தவித்தது
குடிகாரனின் செருப்பு !

0

பங்களா மனிதர்களுக்கு
ரொம்பம் பிடிக்கும்
சின்ன வீடு !

0

50 பேர் சுட்டு கொலை
அச்சச்சோ
க் கன்னாவைக் காணோம் !

0

காது குடைந்தேன்
சுகமாயிருந்தது
கோழிக்கு எப்படியோ ?

0

வாசல் வரை வந்து
வழியனுப்பும் மனைவி
எதிர் வீட்டில் இளம்பெண் !

0

டாக்டர் சொல்லாமலேயே
மூச்சை இழுத்துவிட்டான்
எதிரே நர்ஸ் !

0

தேர்தல் திருவிழா
முக்கிய அறிவிப்பு
திருடர்கள் ஜாக்கிறதை !

0

நண்பர்களுக்கு தடை உத்தரவு
வயதுக்கு வந்துவிட்டாள்
தங்கை !

0

குறுகிய வளைவு
நிர்வாண சுவரரொட்டி
சிவலோக பதவி !

0

உடுக்க உடையுண்டு
உண்ண உணவில்லை
ஸோ கேஸ் பொம்மை !

0

பிஞ்சு விரல்கள்
உதிரும் வானவில்
தப்பியோடும் வண்ணத்துப்பூச்சி !

0

அரசு அலுவலரின் கதவு
சொல்லாமல் சொல்லியது
தள்ளு !

0

ஓடியது சிங்கம்
விரட்டியது மான்
குடை ராட்டிணம் !

0

வயதான கிழவிக்கு
பச்சைக் கூந்தல்
தலையில் புல்கட்டு !

0

பழைய சோற்றின்
பரிணாம வளர்ச்சி
மொட்டை மாடியில் வடகம் !

Create a free website or blog at WordPress.com.